நிழல்களும் காதலிக்கும்..

நண்பர்கள்


உலகம் என்னை பார்த்து கேட்டது

உனக்கு எத்தனை நண்பர்கள் என்று ,
பாவம் அதற்கு என்ன தெரியும்
என் நண்பர்கள் தான்
என் உலகம் என்று !

நிஜம்


தூண்டிலில் சிக்கிய மீனும் 

உன் அன்பில் சிக்கிய நானும்
துடிப்பது நிஜம்
மீன் துடிப்பதுவிடுதலைக்காக
நான் துடிப்பது உன் நட்பிற்காக!

நட்பு


நான் ஒரு கண்ணாடி

என்னை பார்த்து
நீ சிரித்தால்
நானும் சிரிப்பேன்
நீ அழுதால்
நானும் அழுவேன்
ஆனால்...
நீ அடித்தால்
நான் அடிக்க மாட்டேன்
உடைந்து போவேன்...!
அது தான் நட்பு

பாசம்

நீ உனக்காக அழுகிறாய்
என்றால் யாரையோ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம் ...!

என் நினைவுகள் என்றும் உன்னுடனே


நான் விருப்பப்பட்டது 
என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு!
இன்று நீ!

**




உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,

குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி 
என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!

**


உன் நினைவுகளே 

வாழ்க்கை 
என்றான பிறகு

நீ 

தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில் 
இருந்தால் என்ன ?

எங்கே சென்று விடுவாய் எனைத் தவிக்க விட்டு?


என் உதட்டின் கடைசிப் புன்னகை
என் கண்களின் மிக நீண்ட கண்ணீர்
இரண்டுமே நீ கொடுத்தவை!

என்னை விட்டு விலகுவதாக நினைத்து
ஓடிக் கொண்டேயிருக்கிறாய்...

வானமாய் என் அன்பை
விரித்து வைத்திருக்கிறேன்..

எங்கே சென்று விடுவாய்
என்னைத் தவிர்த்துவிட்டு?

வலிக்கிறது..


நீ அருகில் இருக்கும்
போது அடி
பட்ட காயதின்
வலி தெரிவதில்லை
நீ அருகில் இல்லாத‌
போது இதய
துடிப்பு கூட‌
வலிக்கிறது

காதலித்துப் பார்!


உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !


தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!


இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!

காதல் தோல்வி


காதலில் தோற்பவர்கள்
பிணமாகிறார்கள் அல்லது
பிணமாக வாழ்கிறார்கள்
நினைவுகள் மட்டும் உயிரோடு !

roja thottam




நம் கணங்கள் காண்கின்ற கனவெல்லாம் ,
அதிகாலை தாண்டினால் நிற்காது ,
நம் உள்ளம் காண்கின்ற கனவெல்லாம் ,
எந்த காலம் ஆயினும் தோற்காது ,