என்னை
கடந்துபோகும் காற்றை உணர்கிறேன்
உன் முச்சின் வெப்பத்தில்
காற்றும் சுவாசித்ததை உணராமல்...
உணர்வுகளோடு பயணம் செய்கிறேன்
என் விழி சிந்திய
ஒரு துளி நீரில்
நீ கலந்ததை அறியாமல்….
என்ணை தொடரும் போதுதான் அறிகிறேன்
தேகம் தீண்டா
என் விரல் நுனியில்
உன் பாதச்சுவட்டின் நிழல் பட்டதை….
அமைதியின் யுகம் கேட்கிறேன்
நினைவுகள்
நிழல் கொண்டாலும்
என் நெஞ்சை கசக்கி
உன்னை மீட்க பார்...