ஏன் இதயம் உடைத்தாய்


உன்னையே உயிராக எண்ணிய
என் மனம் தெளிந்துவிட்டது இன்று
உன் பொழுதுபோக்கிற்காகத்தான்
நீ காதல் எனும் நாடகம் ஆடினாய் என்று....

ஆனால்......
உன் நடிப்பால் ஏமாறிய என் இதயமோ
நான் சொல்லும் உண்மையை கேட்க மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம் தவிக்கிறது....

எனக்காக ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என் இதயத்திற்கு நீயே சொல்லிவிடு
நீ என்னுடன் பழகியது ஒரு பொய் நாடகமே என்று....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக