சமாதிக் காதல்

காலத்தின் சுழற்சியில்
காதலித்தவர்கள் எல்லோரும்
சமாதியானார்கள்
ஷாஜஹான் மட்டுமே
சமாதியை காதலாக்கினான்

பார்வையில்

காதலும்
கபடியும் ஒன்று
இரண்டும்
கண்கள் பார்க்கும் போதே
காலை
வாரி விடுகின்றன..

சுவாசமாய்

உன்னை விட்டுப் பிரியச் சொன்னால்
உன் பெரு மூச்சைப் போல் பிரிவேன்
மீண்டும் உன்னுள் சேரச் சொன்னால்
நீ பெறும் மூச்சைப் போல் வருவேன்

புனிதத் தன்மை

ராமன்
கால் பட்டு
கல்
அகலிகை ஆனது
உன்
கண்பட்டு
மனிதர்கள்
கல் ஆகிறார்கள்

விம்பம்

நீ அலை
நான் கரை
சேர்ந்தால்
கடற்கரை

காதல்

காதல் ஒரு கண்ணாடி
ஆனால் அது
தோன்றுவதை எல்லாம்
காட்டுவது இல்லை

பார்வை

உன்னைப் பார்க்க
சூரியன் வருவதை
காலை என்கிறோம்
உன்னைப் பார்த்து
சூரியன் விழுவதை
மாலை என்கிறோம்