உண்மைக் காதல்

உண்மையாய் நேசிக்கும்
உள்ளங்களின் காதல்
அந்தக் கடவுளே
எதிர்த்தாலும் நிச்சயம்
ஒருநாள் திருமண
பந்தத்தில் இணையும்

வாழ்த்தலாம்

சிவப்பு ரோஜாக்கள்
கை நிறைய பரிசுகள்
இவையெல்லாம் இருபதில்
காதலின் ஆரம்பத்தில்
இதே ஆர்வம் அறுபதிலும்
வருமாயின்-நிச்சயம்
வாழ்த்தலாம் காதலை..