காதல் ஒரு சுகமான சுமை
















உனக்காக காத்திருக்கிறேன்

என் இமையக்கதவுகள் மூடியும்
என் இதயக்கமலங்கள் மூடவில்லை 
உன் வருகைக்காக

என் உள்ளமே

பனி மழைச்சாரலே
மெல்லன நீ வீசு
நறுமணத் தென்றலே
என் மார்பில் நீ சாய்கையில்
சில்லென சிலிர்குதே
என் உள்ளம்

என் இதயத்திற்கு

வாசம் அது மலருக்கு சொந்தம்
சூரியன் அது பகலுக்கு சொந்தம்
இரவு அது இருளுக்கு சொந்தம்
தூக்கம் அது விழிகளுக்கு சொந்தம்
என் இதயம் அது உனக்கு சொந்தம்
என் காதல் அது உனக்கு சொந்தம்
என் காதல் அது உனக்கு சொந்தம்
ஆனால்
நீ மட்டும் எனக்கு சொந்தமாக
வர மறுக்கிறாய்..

செல்லப்பூவே

என் இதயத்தில் கலந்த
          உறவே
நீ என்னுள் வாழும் வரை
          உன் நினைவோடு
வாழ்வேன்
          உன் நினைவோடு நான்
    வாழும் வரை
நான் உயிரோடு
வாழ்வேன்

இரவின் மடியில்

கண்களுக்கு
உலகமே தெரியலாம்...
கண்ணீருக்கு
உள்ளம் மட்டுமே தெரியும்!

வலி தரும் இதயம்

நீ என்னை வெறுப்பதாகச்
சொன்னாலும்
விரும்புவதாக
உன் இதயம் சொல்கிறது..!

வலி

நீ தூரத்து சூரியனாய் சுட்டெரித்தாலும் உனைத்
தொடர்ந்தே முடியும் பீனிக்ஸ் பறவைகள்
உன் நினைவுகள்...

உன்னைத் தானே

கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும்...!
கை சேரும் காலம் அதை
என் நெஞ்சம் தேடும்...!