நினைவுகளுக்கு வர்ணம் சேர்த்த
பௌர்ணமி இரவுகள்
தனிமையின் விம்பம் காட்டிய
ஒற்றை நிலவு
நனைந்த விழிகளை
துடைத்துப் போன தென்றல்
உடைந்து போன உணர்வுகளை
பகிர்ந்துகொண்ட கருமை
இதயம் சுமந்த பாரம்
சில மணி நேரம்
இறக்கி வைத்த படிக் கட்டு
அந்த நாட்களின்
பசுமையான வாசனை
இன்னும் என் நினைவுகளுக்குள்
ஆழமாக
காலம் விட்டுச் சென்ற
உருவம் இல்ல புகைப் படங்கள்!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக