போதுமடா
நீ தந்த பாசவலிகள்
நான் பார்க்கின்ற போது
நீ பார்க்காதிருப்பதும்
நான் பேசுகின்ற போது
நீ பேசாதிருப்பதும்
போதுமடா...
சின்ன சின்ன வார்த்தைகளினூடே
செல்லமாக நீ சிரிப்பதும்
கண்களால் சைகை காட்டிவிடுவதும்
போதுமடா ...
என் வீட்டுச் சாலையோரம்
எதிரெதிரே சந்திப்பதும்
வானம் பார்த்து பூமி பார்த்து
மணிக்கணக்காய் மெளனிப்பதும்
போதுமடா ...
எனக்காக நீயும்
உனக்காக நானும்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக