skip to main |
skip to sidebar
அன்பே
நான்
வெறும் இதயம்
நீயே,
அதன் துடிப்பு
உன் இயக்கம்
நின்றால்
என் இதயம்
அன்பே
உன் விழிகளை மூடாதே
இந்த ஒரு நிமிடமாவது
தெரியட்டும்
உன் விழியில்
என் விம்பம்
தோல்வி
என்பது
வெற்றிக்கு
முதல் படியாம்
அப்படியானால்
காதலுக்கு.....?
இதய ரோஜாச் செடியில்
ஒற்றைப் பூப் பூத்து விட்டால்
அனைத்து முட்களும்
உதிர்ந்து போகின்றன
என்னோடு நீயிருந்தால் வானம் கூட என் கைவசம்
என்னை விட்டு நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்திடும்
உன் பெயரை உச்சரித்தே நிதமும் வாழ்கிறேன்-அன்பே
உன் சுவாசத்தில் மட்டுமே
நான் வாசம் செய்கிறேன்
காத்திருக்கிறேன்
விடியலுக்காக ஏட்டில்
மட்டுமல்ல வாழ்விலும்
வசந்தம் வரட்டும் என்பதற்காக!!
என் இமையக்கதவுகள் மூடியும்
என் இதயக்கமலங்கள் மூடவில்லை
உன் வருகைக்காக
பனி மழைச்சாரலே
மெல்லன நீ வீசு
நறுமணத் தென்றலே
என் மார்பில் நீ சாய்கையில்
சில்லென சிலிர்குதே
என் உள்ளம்
வாசம் அது மலருக்கு சொந்தம்
சூரியன் அது பகலுக்கு சொந்தம்
இரவு அது இருளுக்கு சொந்தம்
தூக்கம் அது விழிகளுக்கு சொந்தம்
என் இதயம் அது உனக்கு சொந்தம்
என் காதல் அது உனக்கு சொந்தம்
என் காதல் அது உனக்கு சொந்தம்
ஆனால்
நீ மட்டும் எனக்கு சொந்தமாக
வர மறுக்கிறாய்..
என் இதயத்தில் கலந்த
உறவே
நீ என்னுள் வாழும் வரை
உன் நினைவோடு
வாழ்வேன்
உன் நினைவோடு நான்
வாழும் வரை
நான் உயிரோடு
வாழ்வேன்
கண்களுக்கு
உலகமே தெரியலாம்...
கண்ணீருக்கு
உள்ளம் மட்டுமே தெரியும்!
நீ என்னை வெறுப்பதாகச்
சொன்னாலும்
விரும்புவதாக
உன் இதயம் சொல்கிறது..!
நீ தூரத்து சூரியனாய் சுட்டெரித்தாலும் உனைத்
தொடர்ந்தே முடியும் பீனிக்ஸ் பறவைகள்
உன் நினைவுகள்...
கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும்...!
கை சேரும் காலம் அதை
என் நெஞ்சம் தேடும்...!
அதட்டி வழி நடத்துவது அப்பா
கற்பித்து வழி நடத்துவது ஆசான்
அன்பைப் பகிர்வது சகோதர உறவு
அழ வைத்து ரசிப்பது காதல்..
ஆனால்
அனைத்துக்கும் துணை நிற்பது நட்பு..
நேசித்த இதயத்தையும்
சுவாசித்த நட்பையும்
ஒரு நாளும் மறக்க முடியாது...!!
சோகம் தனிமையில் கூட வரும்..
ஆனால்
சந்தோஷம் நண்பர்பளுடன் இருக்கும் போது மட்டுமே வரும்...
உன்னை பார்க்கும் போது சிரிக்கும் உதடுகளை விட
உனக்காக கண்ணீர் சிந்தும் கண்களை நேசி
அது தான் உண்மையான நட்பு..
நினைவில் வைத்து கனவில் காண்பத அல்ல நட்பு
மனதில் வைத்து மரணம் வரை தொடர்வது தான் உண்மையான நட்பு