நம் காதலுக்காக ...


நீண்ட தூரம் பயணித்த பின்பும்...

திரும்பி நடக்கிறேன் ...
முடியவில்லை ...
நெஞ்சினில் உன் நினைவுகள்
சுமையாய் கனக்கிறது ....
எனை பிரிந்து விட்டாயே ...
என்ற ஏக்கம் ...
எனை வாட்டும் போதெல்லாம் ....
உன் நினைவுகள் ....
எனை அணைத்துக்கொள்கின்றது....


மரணம்
எனைத்தளுவும் போதும்....
உன் நினைவின் மடியில் ...
உறங்கிக்கொண்டிருப்பேன்
கண்மணியே ...
காலங்கள் கடந்து போனாலும் ....
இன்றும்.....
நீ நேசிக்காத நான் ...
உன்நினைவுகளை நேசிப்பதற்கு ...
மன்னித்துவிடு ...
நீ பிரிந்து சென்றபோதும் ...
எனக்காக ....
உன் நினைவுகளையாவது ......
விட்டுச் சென்றாயே...
அது போதும் ....
காலம்முழுவதும் .....
உன் நினைவுகளை நேசித்தபடி...
வாழ்ந்திடுவேன்....

மறுபிறவி ஒன்றிருந்தால்...
அதிலும் உனக்காகப் பிறப்பேன்.......
உன்னை நேசிப்பேன் ....
உன் நினைவுகளை சுமந்தபடி .....
உனக்காக கவிவடிப்பேன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக