உன்னை அணைத்து
வாழ நினைத்த என்னை
உன்னை நினைத்து
வாழ வைத்துவிட்டாயே
என் வாழ்வில்
வாசத்தினை மீதியில்லாமல்
கொண்டு சென்ற நீ - இன்று
என்னருகில் இருக்கிறாய்
இன்னொரு பெண்ணுடன்!!
ஊமை காயத்தால்
உதிரம் உதிரவில்லை!
கன்றிப்போய்
கனத்து விட்டது மனம்
ஒத்தடம் கொடுத்திட
உயிரே அருகில் வரமாட்டாயா?
உயிர் கவிதையொன்று எழுதுவதற்கு
வார்த்தைகள் தேடினேன்
அது நீ என அறியாமல்.....!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக